இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் KP Astrology முறையை பற்றி சற்று சுருக்கமாக விளக்கம் அளித்துள்ள நிலையில், KP Astrology in Tamil எனும் இந்த பக்கத்தில் KP ஜோதிடம் என்றால் என்ன? என்பதை பற்றி மிக விரிவாக உதாரணத்துடன் பார்க்க இருக்கிறோம்.
கீழ்கண்ட கேள்விகளுக்கு இந்த கட்டுரையில் தெளிவான விளக்கம் கிடைக்கும்:
இந்த கட்டுரை என்பது KP Astrology முறையின் மகத்துவத்தை பொதுமக்களிடம் எளிமையாக கொண்டு செல்வதற்காக எழுதப்பட்டதே தவிர, Vedic Astrology முறையை விமர்சனம் செய்வதற்காக அல்ல என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜோதிடத்தில் ஒருவரின் விதி அமைப்பை தெளிவாக அறிய, அவரின் ஜாதக கணிதம் மிகவும் துல்லியமாக இருக்க வேண்டும். பாரம்பரிய ஜோதிட முறையில் (Vedic Astrology) ஜாதகம் என்றால் அது ராசி கட்டமும், நவாம்ச கட்டமும் தான். இந்த விஷயம் ஜோதிடர்கள், ஜோதிட ஆர்வலர்கள் மட்டுமல்லாது பெரும்பாலான மக்களும் அறிந்த ஒரு விஷயம் தான்.
உண்மையில், ராசி சக்கரம் போன்று மேலும் 10 சக்கரங்கள் உள்ளன. இவற்றை தசவர்க்கம் என அழைப்பார்கள். நவாம்சம் என்பது இந்த 10 சக்கரங்களில் ஒன்று என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதாவது, ராசி சக்கரம் — பிரதானமானது. ஒரு குழந்தை பிறந்த போது இருந்த கிரக நிலைகளை தெரிவிப்பது ஆகும்.
10 வர்க்க சக்கரங்கள் (தசவர்க்கம்)
ராசி கட்டத்தில் உள்ள கிரக நிலைகளில் மாற்றம் ஏற்பட குறைந்தது 50 நிமிடங்கள் ஆகும். அது கூட லக்னப்புள்ளி தான் பயணிக்கும் நட்சத்திரத்தை மாற்றுவதால் ஏற்படும் மாற்றமே தவிர, 2 மணி நேரத்தில் நவகிரகங்களின் நகர்வில் பெரிய மாற்றம் ஏதும் இருக்காது.
இந்த 2 மணி நேர இடைவெளியில் மேற்சொன்ன வர்க்க சக்கரங்களால் பயன் ஏதேனும் உள்ளதா என்று கேட்டால், நிச்சயம் இல்லை என்றே சொல்வேன். காரணம், இதற்கான உறுதியான விதிகளை மூல நூல்களில் கூட காண முடியாது.
குறுகிய கால இடைவெளியில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகங்களை வேறுபடுத்தி காட்டுவதற்காகவே இந்த வர்க்க சக்கரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இதற்கென தெளிவான விதிகள் எதுவும் உருவாக்கப்படவில்லை என்பதே உண்மை.
ஜோதிட வட்டாரத்தில் இன்றளவும் ராசி கட்டத்துடன் நவாம்ச சக்கரம் மட்டுமே வழக்கத்தில் இருப்பதே இதற்கு சாட்சி. இதிலும் ஒரு சில ஜோதிடர்கள் வெறும் ராசி கட்டத்தை மட்டும் வைத்து பலன் சொல்லி வருவது மிகவும் வேதனைக்குரிய விஷயம் ஆகும்.
சரி, விஷயத்திற்கு வருவோம். இந்த ராசி மற்றும் நவாம்ச கட்டங்களில் ஒரு சிறு மாற்றத்தை காண வேண்டும் என்றாலும், நாம் குறைந்தது சுமார் 13 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதாவது, ஒரு குழந்தை காலை 10:00 மணிக்கு பிறந்தால், அதே ராசி மற்றும் நவாம்ச நிலைகள் காலை 10:12 மணி வரை மாறாமல் இருக்கும். காலை 10:13 மணிக்கு பிறகே நவாம்ச கட்டத்தின் லக்ன நிலையில் ஒரு சிறு மாற்றம் இருக்கும். அதாவது பிறந்த நேரம் 12 நிமிடங்கள் மாறினாலும் கூட, பாரம்பரிய முறைப்படி கணிக்கும் ஜாதகத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது.
ஓர் உண்மையான உதாரணம்: Ramesh & Suresh
கீழே கொடுத்துள்ள இரண்டு ஜாதகங்களும், ஒரே ஊரில், ஒரே நாளில், 13 நிமிட இடைவெளியில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்குரியவை. அன்பர்கள் சற்று கவனமாக பார்வையிட வேண்டுகிறேன்.
Mr. Ramesh — பிறந்த நேரம்: 07:00 PM
Mr. Suresh — பிறந்த நேரம்: 07:13 PM
மேலே கொடுத்துள்ள இரண்டு ஜாதகங்களும் திருக்கணித பஞ்சாங்க முறைப்படி, டிகிரி சுத்தமாக மிகவும் துல்லியமாக கணிக்கப்பட்டவை. இருவரின் ஜாதகத்தில் சிறு வித்தியாசம் கூட இல்லை, ஒரே ஜாதகம் தான் வந்துள்ளது — ஆனால் பிறந்த நேரத்தில் இருவருக்கும் 13 நிமிட வித்தியாசம் இருக்கிறது.
பாரம்பரிய ஜோதிட முறைப்படி கணித்தால், சுமார் 13 நிமிட இடைவெளியில் பிறக்கும் அனைவருக்கும் ஒரே ஜாதகம் தான் வரும். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பொதுவாக 3 அல்லது 4 நிமிட இடைவெளியில் பிறந்தும் கூட, அவர்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை அமைந்துவிடுமா? நிச்சயமாக இல்லை.
சரி, இரட்டை குழந்தைகள் பிறப்பது கூட கொஞ்சம் அரிதான விஷயம் என்று எடுத்துக் கொண்டாலும், பிறப்பு விகிதம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருவதால், 13 நிமிட இடைவெளிக்குள் ஒரே ஊரில் வெவ்வேறு தாய்மார்களுக்கு பல குழந்தைகள் பிறக்கின்றனர். ஆக, இந்த ஜாதக கணிதம் செய்யும் முறையை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஜோதிட துறைக்கு ஏற்பட்டது.
உபநட்சத்திர கோட்பாடு
சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து காலஞ்சென்ற, "ஜோதிட மாமேதை", "ஜோதிட மார்த்தாண்ட்" என போற்றப்படும் பெருமதிப்பிற்குரிய K. S. Krishnamurthy ஐயா அவர்கள், முன்னோர்கள் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் 4 பாதங்களாக பிரித்ததை அடிப்படையாக வைத்து, ஒவ்வொரு நட்சத்திரத்தையும் 9 பிரிவுகளாக பிரித்து, பல ஆராய்ச்சிகளின் பலனாக உபநட்சத்திரம் எனும் புதிய கோட்பாட்டை ஜோதிடத்தில் அறிமுகம் செய்தார்.
இந்த உபநட்சத்திர கோட்பாட்டின் (Sub Lord Theory) மூலமாக ஜாதக கணிதத்தை மிகவும் துல்லியப்படுத்தி, ஜோதிட உலகில் ஓர் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார் என்றால் அது மிகையாகாது. உபநட்சத்திர கோட்பாட்டின்படி ஜாதகம் கணிதம் செய்யப்படும் பொழுது, பிறந்த நேரத்தில் வெறும் 30 வினாடி மாற்றம் செய்தாலே ஜாதகத்தில் கிரக நிலைகள் மாறுவதை நாம் தெளிவாக உணரலாம். இந்த KP ஜோதிட முறையில் கணிக்கப்படும் ஜாதகங்கள் எந்த அளவிற்கு துல்லியமானது என்பதை அன்பர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.
K. S. Krishnamurthy ஐயா அவர்கள் வழங்கிய இந்த முறைக்கு "Krishnamurthy Paddhati" என பெயரிடப்பட்டது — இதைத்தான் நாம் சுருக்கமாக KP Astrology என அழைக்கிறோம்.
(KP means Krishnamurthy Paddhati. பத்ததி என்பதற்கு வழி அல்லது ஜோதிட முறை என்பது பொருள் ஆகும்.)
RELATED TAGS:
Astro Arun | Tamil Astrology Online | KP Astrology Online | KP Astrology in Tamil | Learn Astrology Online





